Saturday 2 November 2013

பல் நோய்களுக்கு ஹோமியோ



பலர் பல் வலியை வெறும் வலி நிவாரணிகளை உட்கொண்டு அலட்சியமாக விட்டு விடுவார்கள், பல் வலியை புறக்கணிப்பது ஆபத்தாகும். நவீன சிகிச்சை முறையில் பல் வலிக்கு ‌நிவாரண‌ம் காணாம‌ல் பல்லை பிடுங்குதல், பல்லை அடைத்தல் மற்றும் ரூட் கேனால் முறை என்று பல உள்ளன.

நம்மில் பலருக்கு சந்தேகம் உண்டு ஹோமியோவுக்கும் பல் வலிக்கும் என்ன தொடர்பு என்று. ஏனெனில் பல் மருத்துவத்திற்கு தேவையான கருவிகளுக்கு ஹோமியோ என்ன செய்யும் என்று பலரும் கே‌ள்‌வி எழு‌ப்புவ‌ர்.

ஹோமியோபதி, பல்வலி, ஈறு புண்கள், பற்சிதைவு முதலியவற்றை குணப்படுத்தவல்லதுதான்.

ஹோமியோ சிகிச்சையில் பல் வலிக்கு மருந்துகள் கொடுக்கும் முன்பு நோய்க்குறிகள் மற்றும் அவை போன்ற அடையாளங்களை தெரிந்து கொண்டுதான் கொடுப்பார்கள்.

பயங்கரமான பல்வலிக்கு ஹோமியோவில் ஆர‌ஸ் ஆல்ப் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. கன்னம் வீங்கியிருந்தால் இம்மருந்து பயன்படாது. இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் பெண்களுக்கு மாத விடாய்க்கு முன்னோ பின்னோ எற்படும் பல்வலிக்கு இம்மருந்து சரியானது.

சிலருக்கு பற்குழியில் கடுமையான வீக்கம் எற்படும் இதனால் பல் வலி கடுமையாக ஏற்படும் இதற்கு பெல்லடோனா என்ற ஹோமியோ மருந்து உகந்தது.

மேலும் சிலருக்கு பல்வலியால் கன்னத்தில் வீக்கம் இருக்கும், ஏதாவது உட்கொள்ளும்போது வலி அதிகரிக்கும், மேலும் இடை விடாது உமிழ் நீர் ஊறிக்கொண்டிருக்கும், மேலும் சிலருக்கு அழுகை கோபம் நடுக்கம் பட படப்பு ஆகியவைகளும் இருக்கும் இதற்கு சமோமில்லா என்ற மருந்தை அளிக்கின்றனர்.

மேலும் பல்வலி விட்டு விட்டு வருவதற்கு காஃபியா க்ருடா என்ற மருந்தும் பல்வலி தருணத்தில் ஊறும் உமிழ் நீரால் ஏற்படும் வாய் துர் நாற்றத்திற்கு மெர்க்குரிய‌ஸ் சொலுபுலி‌ஸ் என்ற மருந்து சிபாரிசு செய்யப்படுகிறது.

பல் வேர்களில் புண், வலி ஈறு வீக்கம் மற்றும் வாய் நாற்றம் ஆகியவைகளுக்கு மெர்க் விவ் என்ற மருந்தும், விடியற் காலையில் தீவிரமாகும் பல் வலிக்கு நக்‌ஸ் வாமிகா என்ற மருந்தையும்
ஹோமியோவில் சிபாரிசு செய்கின்றனர்.

No comments:

Post a Comment