Saturday 2 November 2013

சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு!

 
"சைனஸ்" என்றால் என்ன?

தலையின் மண்டை எலும்பில் மூக்குப் பகுதியில் உள்ள குழிக்கு "சைனஸ்" என்று பெயர். இந்தப் பாகங்களில் உள்ள குழிகளில் இரத்தம் அல்லது காற்று அடைப்பு என இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுவதைத்தான் சைனசிடிஸ் என்பார்கள். இதைத்தான் நாம் `சைனஸ்' பிரச்சனை என்கிறோம்.

எப்படிச் சிகிச்சை அளிக்கிறார்கள்?

குழிகள் அமைந்துள்ள எலும்புப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த வியாதியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதலாவது :

கண்களுக்கு மேல் சுற்றி அமைந்துள்ள எலும்புப் பகுதி (ஆர்பிட்), மூக்கின் இரண்டு பக்கமுள்ள மேல் தாடை எலும்புப் பகுதி (மாக்ஸிலரி), மூக்கின் அடிப்பாகத்தில் சல்லடை போன்ற எலும்புப் பகுதி (எத்மாய்ட்) ஆகிய தலையின் முன் பக்கமுள்ள எலும்புக் குழிகள் பாதிப்பு "ஃப்ரண்டல் சைனஸ்" எனப்படும்.

முகத்தின் ஒவ்வொரு தாடையில் உள்ள எலும்புக் குழியின் உயரம் 3 செ.மீ. அகலம் 2.5 செ.மீ. ஆழம், 2 செ.மீ. உள்ளது. இதில் பெண்களைவிட, ஆண்களுக்கு சற்று அளவு அதிகமிருக்கும்.

இரண்டாவது :

மூக்கின் பின்புறமுள்ள (தலையின் பின்பகுதி) "ஸ்ஃபினாய்ட்" என்ற எலும்புக் குழியில் பாதிப்பு உண்டாவதை "ஸ்ஃபினாய்டல் சைனஸ்" என்று கூறப்படுகிறது.

சைனஸ் நோய் அறிகுறிகள் :


இந்த இரண்டு விதமான பாதிப்புகளும், மூக்கின் மூலமாகச் சென்று தொற்றுகின்றன. ஒவ்வாமை, புகை, காஸ், தூசு நிறைந்த சுற்றுச்சூழல், அசுத்தமான தண்ணீரில் நீச்சல் அடிப்பது, மர வேலை செய்தல், சின்னம்மை, மூக்கினுள் சதை வளர்ச்சி ஆகிய காரணங்களால் வர வாய்ப்புள்ளது. கண்வலி, தலைவலி, முகவலி, காய்ச்சல், சளி, வாசனை உணர்வு இல்லாமை, மூச்சுத்திணறல் ஆகிய நோய்க்குறிகள் இருக்கும்.

ஹோமியோபதி மருந்து:

ஹோமியோபதி மருத்துவத்தில் இவ்வியாதிகளுக்கான இரண்டு விதமான முக்கிய மருந்துகள் :


ஃப்ரண்டல் சைனஸ் :

யூகலிப்டஸ் ஜி, காலி பைக்ரோமிகம், டூக்ரியம்.


ஸ்ஃபினாய்டல் சைனஸ் :




ஆர்னிகா, ஹிபார் சல்ப், ஸ்டிக்டா.

போன்ற நல்ல பலன் தரும் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.

2 comments: