Thursday 2 January 2014

தலைவலி


தலைவலி தீராத தலைவலியாகிவிட்டது என்று எத்தனையோ பேர் அலுத்துக் கொள்வதை நம் காதால் கேட்க முடிகிறது. இந்தத் தலைவலியை ஹோமியோபதி மருந்துகள் மூலம் நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

தலைவலிக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் டாக்டருடன் கலந்தாலோசித்து பொறுமையாக வைத்தியம் செய்து கொண்டால் நிச்சயம் குணப்படுத்த முடியும். தலைவலியில் பல வகைகள் உள்ளன.

1.
GASTRIC HEADACHE
2.
NERVOUS HEADACHE
3.
SINUS HEADACHE
4.
RHEUMATIC HEADACHE
5.
MIGRAIN
6.
SUN HEADACHE போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

ஓய்வின்றி உழைக்கும் மக்கள் மத்தியில் கோபம், emotion, tension அதிகமாக உண்டாகிறது. அலுவலகங்களில் தொடர்ந்து அதிக வேலைகளில் (mental exertion) ஈடுபடுவோருக்கு தலைலி வந்தால், தலை விரிவடைவதைப் போல (expanding) ஒரு உணர்வு இருக்கும். தலையை துணியால் இறுக்கிக் கட்டிக் கொண்டால் பரவாயில்லை என்ற அறிகுறிகள் இருந்தால் Arg.nit என்ற மருந்தை கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இதற்கு Bryonia, Pulsatilla, Belladonna போன்றவையும் நல்ல மருந்துகளாகும்.

வெய்யிலில் அலைவது, சிகரெட் குடிப்பது, மூளைக்கு அதிக வேலைப்பளு, திடீரென்று ஒரு துயரச் சம்பவத்தைக் கேட்ட அதிர்ச்சி போன்ற காரணங்களால் தலைவலி வந்தால் வலி கழுத்து பகுதியில் ஆரம்பித்து உச்சந்தலை, நெற்றிப் பகுதிக்கு பரவினால் Gelsemium என்ற மருந்து கொடுத்து குணமாக்கிவிடலாம்.

ஜீரணிக் கோளாறு, பித்தம், மலச்சிக்கலுடன் தலைவலியும் சேர்ந்து வருவதற்கு Nux.Vomica, Bryonia, Lac.def, Pulsatilla போன்றவை நல்ல மருந்துகளாகும்.

ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு ஹோமியோபதி மூலம் நிச்சயம் நிரந்தர குணமளிக்க முடியும். வலது பக்க தலைவலிக்கு Sanguinaria, Silicea, Iris Versicolor, Cedron போன்றவை மிகச் சிறந்த மருந்துகளாகும். இந்த மருந்துகள் மூலம் பல வருடமாக தலைவலியால் கஷ்டப்படுபவர்களைக் குணப்படுத்த முடியும்.

இடது பக்கத் தலைவலிக்கு Nat.mur, Spigelia, Sepia, Thuja, Onosmodium போன்றவை மிகச் சிறந்த மருந்துகள். அறிகுறிகளுக்கேற்ப உரிய மருந்தை சரியாக தேர்வு செய்து நோயாளியின் மன குண நிலையும் கவனித்துக் கொடுக்கும்போது நிச்சயமாக குணமாகிறது.

கணவன், மனைவி குழந்தைகள் என்று குடும்ப சகிதமாக பேருந்தில் பயணம் செய்துவிட்டு, சுற்றுலா தளங்களையும், கடைகளையும் மகிழ்ச்சியோடு சுற்றிப் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பெரும்பாலோர், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிக சோர்வினாலும், பெட்ரோல், டீசல் போன்ற வாசனைகளை நுகர்வதாலும் தலைவலி வருகிறது. இதற்கு Sepia, Epiphegus போன்ற மருந்துகள் உகந்தது. அதிக சோர்வால் தலைவலி ஏற்படுகின்றவர்களுக்கும் Cocculus, Glonoine போன்ற மருந்துகள் கொடுத்து வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியரில் பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க mental strain செய்வதாலும், குழந்தைகளின் சப்தங்களுக்கு நடுவில் எப்போதும் இருப்பதாலும், தலைவலி வந்து கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு Scutalaria என்ற மருந்தைக் கொடுத்தால் தலைவலி குறைந்து நாளடைவில் பரிபூரண குணம் கிடைக்கிறது. இதுபோன்ற தலைவலிக்கு Acid.pic -ம் நல்ல மருந்தாகும்.

பள்ளி மாணவ மாணவியர் அதிகமாக படிக்கும்போது Eye Strain மூலம் தலைவலி வந்தாலும் ஹோமியோபதி மருந்துகளான Nat.mur, Calc.phos, Acid.phos, Ruta போன்ற குறிகளுக்கு (Symptoms) ஏற்ப தேர்வு செய்து கொடுத்தால் முற்றிலும் குணப்படுத்தலாம்.

No comments:

Post a Comment